தமிழில்

எனது தமிழ் ஆக்கங்களினை இப் பதிவில் நீங்கள் பார்க்கலாம்... எனது ஏனைய பதிவுகளைப் பார்ப்பதற்கு "View My Complete Profile" இனை அழுத்தி வேண்டிய பதிவினைத் தெரிவு செய்க.

Thursday, May 13, 2010

இடம்பெயர் தமிழன்


பிறந்தாய் வளர்வதற்காக
படித்தாய் பின் நற்பதவிக்காக...
பதவி வந்து
பணமும் வந்துவிட்டால்
சமூகத்தில் நல்ல ஒரு
கெளரவமும் வந்துவிடுமென
உன்னம்மா சொன்னாளாம்...

இளமையில் காதலித்தாய்
அவள் அளகாய் உள்ளாள் என்பதற்காக
பின்பு அவளை மணந்துகொண்டாய்
திருமண வயது வந்துவிட்டது என்பதற்காக
அப்போது தான்
குளந்தை குட்டிகள் பெற்று
சீரோடும் சிறப்போடும் சந்ததிகள் பெருகுமென
உன் சமூகம் சொன்னதாம்...

ஓய்வின்றி உளைத்தாய்
நல் வாழ்வு வாழ்வதற்காய்???!!!
உளைப்பு மட்டும் வாழ்வாகிப் போனது
குடும்ப்த்தாரிடமோ பேச நேரமின்றிப் போனது
ஒருவரிடையே ஒருவர்
புரிந்துணர்வும் குன்றிப் போகவே
மனத் தாங்கல் மட்டுமே
உனக்கு வரவாகிப் போனது
போனது... போனது...
இன்று உன் உடல் நலமும் குன்றிப் போனது...

உளைத்த காசோ
வங்கியை மட்டும் அலங்கரிக்க
உன் மனையாளோ
நகைக்கடைக் கொலுபொம்மையாயிருக்க
நித்திரையின்றி அலைகிறாய்
இன்று இன்னொரு வீடு வாங்குவதற்காய் நீ
சென்றுவிடும் செல்வத்தை மட்டும் தேடி
மனிதத்தை மறந்து விட்டாயடா...
செருக்கனோ நீ என்றால்
சேற்றுப் பன்றியாய் அல்லவா ஆகிவிட்டாய்...
கேள்விகள் கேட்டால்....
இவையெல்லாம் என் பிள்ளைகளுக்காய் - என்று
பீத்துகிறாய் நீ
நிலையற்ற இவ்வுலகில்
மானிடத்தை மறந்த மனிதப் பிணமா நீ

உன் பிள்ளைகளோ
உன் பாசத்தைப் பார்த்திருந்து
ஏமாற்றமாய் இன்று
எங்கேயோ சென்றுவிட
நீ மட்டும் இங்கு
உன் சொத்தைச் சோகமாய்ப் பார்த்தபடி
ஏதுமறியாது பீத்துகிறாய் நீ
உன் கெளரவத்தை மட்டும் கட்டி அணைத்தபடி
அங்காடி நாய்க்கும்
உனக்கும் என்ன வித்தியாசமடா