நம்மவர்
இக் கவிதை 2004 ஆடி மாதம் வன்னி சென்று வந்த பின்பு எழுதியது.
விடுதலைக்காய் ஏங்கி நிற்கும்
ஆலை மரங்கள் ஈழத் தமிழர்
வேர்கள் பெயர்க்கப்பட்ட போதும்
விழுதாகிய வெளிநாட்டவரால்
மீண்டும் துளிர் விட்டு எழுகின்றனர்
ஓர் நம்பிக்கையுடன்
அன்று கேட்பார் யாரும் இருக்கவில்லை
ஆறுதலும் கிடைக்கவில்லை
நம்மவரோ என்ன செய்வர்?
அங்கு அழுகையே தேசியகீதம் ஆகியதால்
குளறுவதே அரைக் கம்பக் கொடியின்
அடையாளம் ஆகிப் போனது
அவலக் குரல் தேசிய மொழி ஆகியதால்
அங்கு பேசுவதே இரண்டாம்
மொழி ஆக்கப் பட்டது
இந் நிலைகள் இன்று
இறந்த காலம் ஆகி விட்டன
ஆயினும் போரின் தழிம்புகளாய்
உலகில் பின் தங்கி விட்டனர் நம்மவர்
மர நிழலே பள்ளிக்கூடமான போதும்
மரணிக்கா உணர்வுடனே மாணாக்கர்கள் அங்கு
எங்கும் ஓர் எதிர் பார்ப்பு
உலகில் நாமும் எழுந்து நிற்போமென்ற நம்பிக்கை
ஆயினும் ஆண்டாறு படிப்பவர்
ஆறு வயதிற்குரிய வளர்ச்சியுடன் அங்கு
எம்மவர் கதை கேட்டால்
உலகத் தாயே ஓ... என்றழுதிடுவாள்
ஒரு தோப்புக் கிளிகள் நாம்
நம்மவர் நலிந்து போக நாமும் விடலாமோ
எம் மக்கள் நாங்களெல்லாம்
முன் வந்து தோள் கொடுத்தால்
நடந்த கொடுமை எல்லாம்
தூசி போல் துடைத்திடலாம்
4 Comments:
உங்கள் கவிதைக்கு பாராட்டுக்கள் உங்கள் அனுபவங்களை கதைகளாகவும் தாருங்கள்
தொடர்ந்தும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்
வணக்கம் சாத்திரி,
உங்களது பின்னூட்டத்திற்கு எனது நன்றி. நிச்சயமாக எனது அனுபவத்தைனைத் தமிழிலும் தாருவேன். ஆங்கிலத்தில் முதலில் எழுதியபடி இருந்தேன்... அண்மையில் தான் தமிழில் எழுதத் தொடங்கி உள்ளேன்... நான் நினைத்தேன் எமது இளையவர்க்கு ஆங்கிலத்தில் எழுதினால் மிகவும் பயனாக இருக்கும் என... ஆனால் அதனைத் தமிழிலும் எழுதுவது முக்கியம் என்பதனை உணர்ந்ததால் தமிழிலும் நிச்சயம் எழுத உள்ளேன்.
நன்றி பிரபா அண்ணா,
உங்கள் போன்றவர்களின் வாழ்த்துக்களும் உண்மையான அபிப்பிராயங்களும் என் போன்றோருக்குக் கட்டாயம் தேவையான ஒன்று.
Post a Comment
<< Home