தமிழில்

எனது தமிழ் ஆக்கங்களினை இப் பதிவில் நீங்கள் பார்க்கலாம்... எனது ஏனைய பதிவுகளைப் பார்ப்பதற்கு "View My Complete Profile" இனை அழுத்தி வேண்டிய பதிவினைத் தெரிவு செய்க.

Monday, May 14, 2007

ஏன் நம் நாட்டுக் கலைகள் மேற்கிற் பரவவில்லை?

இங்கிலாந்து இந்தியாவினை அடியாண்டு கொண்டு இருந்த பொழுது அவர்கள் ஏன் தாஜ் மகாலைப் பற்றி மட்டும் மேற்கத்தைய உலகிற்கு எடுத்துச் சென்றார்கள்? ஏன் நம் ஊரில்... நம் நாட்டில் இருக்கும் கோயில்களும் அதன் சிற்ப வேலைப்பாடுகள் பற்றியும் வெளி உலகிற்குத் தெரியப் படுத்தவில்லை என்ற கேள்வி பல காலமாகவே என்னுள் எழுந்தவாறே இருந்தது... ஆயினும்... இங்கு இறுதியிலே நான் இணைத்துள்ள ஒலி ஒளிப் பேளை அதனைப் பற்றி தெளிவாக விளக்குகின்றது.

அதாவது நம்மூர்க் கோயில்கள், எவ்வளவோ பிரமாண்ட மாகவும் சிற்ப வேலைப் பாட்டுடனும் கட்டப்பட்ட பொழுதும்; மேற் கத்தேயக் கட்டிடக் கலையுடன் அன்றிருந்த எமது கட்டிடக் கலை அறிவுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் எமக்குக் கிட்டக் கூட நெருங்க முடியாத நிலையில் மேற்கத்தேயம் இருந்த பொழுதும், எதற்காக யாரும் எம்மைக் கண்டு கொள்ளவே இல்லை??

இவ் ஒளிப் பேளையில் கூறுகின்றார்கள், எமது கோவிற் கோபுரங்களில் ஆபாசமான சிலைகள் இருந்தமையே அதற்குக் காரணமாம். அதாவது கிறிஸ்தவ மதத்தினைச் சேர்ந்த (பொதுவாக) இங்கிலாந்தவர்கள் இவ்வாறான ஆபாசம் நிறைந்த கலை வேலைப்பாடுகளை அன்று அடியோடு வெறுத்தும், ஒதுக்கியும் வந்தனராம். (ஆனால் இன்று அவர்கள் கலாச்சாரச் சீர்கேடு விளைவித்து... அம்மணமாக அங்கும் இங்கும் அலைவது வேறு கதை)

சிற்ப வேலைப்பாட்டுடன் கூடிய வேறு கோயிற் கட்டிடங்கள்:



































அக் காலத்தில் இராஜராஜ சோழன் கட்டிய தஞ்சைப் பெரிய கோவில் பற்றிய ஒரு ஒலி ஒளிப் பேளை இது

3 Comments:

At 6:28 AM, Blogger மாசிலா said...

உலகத்திலேயே தாந்தான் அதி புத்திசாலி, படு மேதாவின்னு கனா கண்டுனு இருந்த வெள்ளக்காரனுங்க இத பாத்து வாய் அடச்சி அத பொத்துக் கொண்டானுங்க. அதனாலதான் இத இருட்டடிப்பு செய்துட்டானுக. அவனுக அவனுகளுடைய கலாச்சாரத்தையும் மதத்தையும் தானே பரப்ப வந்தானுக. வந்த இடத்தில் இத பாத்து மலைச்சி கம்முனு ஆயிட்டனுக. மிஷனரியா உள்ள வந்தவனுக நாட்டையே ஆண்டுட்டு போயிட்டானுக. அவனுங்க எப்படி இங்குள்ள நல்ல ஆக்கங்களை வெளி உலகத்துக்கு எடுத்து சொல்லுவானுங்க? மொதலுக்கே மோசம் போன மாதிரிதான். ஆகையால் இதுல ஆச்சரிய படறதுக்கு எதுவும் இல்லைங்க. இப்ப என்ன, அதனால நம்ம கலாச்சாரம் பண்பாடு வீண் போயிடுச்சா என்ன? எல்லாம் ஒரு வகையில நல்லதுக்கேன்னு நெனைச்சிக்க வேண்டியதுதான்.

 
At 5:40 AM, Blogger கானா பிரபா said...

பதிவை வாசித்தேன், நன்றி

 
At 5:31 AM, Blogger Haran said...

மாசிலா, மற்றும் பிரபா அண்ணா,
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

மாசிலா நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மையே.
இந்தியா, இலங்கை என நாடுகளுக்கு வந்தவர்கள் சுருட்டிக் கொண்டு ஓடியது தான் மிச்சம்... என்ன நமது நாடுகளை இன்னும் ஏழை நாடாக்கி விட்டு. இலங்கையில் தமிழருக்கும் சிங்களவருக்கும் அடிப்படைப் பிரச்சனைகளையும் உருவாக்கி விட்டுச் சென்றது தான் மிச்சம்

 

Post a Comment

<< Home