பூ...
வி.ஜெயச்சந்திரனிடம் இருந்து சினேகிதி சுட்டதை, நான் சினேகிதியிடம் இருந்து சுட்டது... மற்றும் வி.ஜெ இடமிருந்து நான் நேரடியாகச் சுட்ட ஒரு பூவும். இவை சுட்ட பழம் அல்ல... சுட்ட பூ ;)

நெஞ்சில் இதம் தந்து
வஞ்சி குழல் கொண்டு
எஞ்சி நின்றாலும்
நிறம் மாறும் பூவே
நிறைவான் உன் வாழ்வு
மாற்றாருக் கின்பங் கொடுப்பதிலா?
வாசங் கொடுத்தாய் - அன்பர்க்கு
நேசங் கொடுத்தாய்...
ஆனால்...
நீ மட்டும் உதிர்ந்து
நம் நிலை யற்ற
வாழ்வை நினைவுறுத்தி
எவருக்குமே இன்பங்
கொடு வென்று
குறிப்பாற் கூறி
பசளை யாகிறாய்

நாம் (பூ) கவிழ்ந்திருக்கக் காரணம்:
நல் வாசம் தந்து -மனிதன்
மனதி லின்பமுந் தருகையில்
துட்டனைப் போல் வந்து
கெட்டதேதும் செய்யா எம்மை
மட்டமான நினைப்புடனே
தொட்டு எம்மைப் பறிப்பதனால்
மனிதா நீயல்லவா
தலை குனிய வேண்டு மென்றே
நல்லவற்றை மறந்த
அவனுக்கு நினைவூட்டுகிறோம்
நம் தலை மட்டுங் குனிந்து
3 Comments:
ஆகா சுட்ட பூவுக்கு கவிதை சுட்டிருக்கிறீங்க :)
எழுதுங்க இன்னும் :)
ஆகா சுடுற போட்டியா நடக்குது :-))
ஐயோ வி.ஜெ... அது சுட்ட பூ மட்டும் தான்... ஆனால் சுடாமல் சமைத்த கவிதை :P - சுடாமல் எப்படிச் சமைப்பது என்று கேட்கப்படாது:P
அந்தச் சமையலும் இந்தச் சமையலும் வேற வேற... ;)
சினேகிதி... என்ன உங்களுக்கு மட்டும் தான் சுடத் தெரியும் எண்டு நினைச்சீங்களோ?:P
Post a Comment
<< Home