தமிழில்

எனது தமிழ் ஆக்கங்களினை இப் பதிவில் நீங்கள் பார்க்கலாம்... எனது ஏனைய பதிவுகளைப் பார்ப்பதற்கு "View My Complete Profile" இனை அழுத்தி வேண்டிய பதிவினைத் தெரிவு செய்க.

Sunday, November 02, 2008

ஈழத் தமிழர்களுக்காக எழும் இந்தியக் குரல்கள்

சிலர் இந்தியாவில் ஈழத் தமிழர்களுக்காக அவர்கள் குரல் கொடுப்பதும், அங்கு நடக்கும் விடயங்களும் வெறும் அரசியல் பகட்டு என்று பேசிக்கொண்டு இருக்கின்றனர். இவ்வாறு பேசிக்கொண்டு இருப்பதனால் எதுவித பயனுமில்லை... இது பேச்சுக்கு உதவாத ஒரு விடயமாகும்... வேலையற்றவர்கள் பொழுது கழியப் பேசும் பேச்சாகும். அவர்கள் அரசியல் நடத்துகிறார்கள் என்று கூறுவதும் எமக்காகக் குரல்கொடுப்பவர்களைப்பற்றிக் கேவலமாகப் பேசுவதுமாகச் சிலர்... அரசியல் நடத்துபவர்கள் நடத்தட்டும்... எமக்காகக் குரல் கொடுப்பவர்களைப் பற்றி நாம் பேசுவோமே...


தமிழ் நாட்டில் இன்று எழுந்திருக்கும் இந்தப் பேரலை மிகவும் குறிப்பிடத்தக்கதும், ஒரு பெரும் வரலாற்று நிகழ்வாகவும் அமைகின்றது. ஈழத்தில் தமிழ் மக்களுக்கச் சிறீலங்கா அரச படைகளால் ஏற்படுத்தப்படும் கொடுமைகள, அட்டூளியங்கள் போன்றவற்றை அவர்கள் தற்பொழுது சிறிதுசிறிதாகப் புரிந்துகொண்டுள்ளனர் என்றே கூற வேண்டும். மற்றும் பலர் தற்போது புரிந்துகொள்ள முயற்சிக்கின்றனர். இந்த மாறுபாடும், இந்தியாவில் குறிப்பாகத் தமிழ் நாட்டில் ஏற்பட்டுள்ள பேரளவிலான ஈழத் தமிழ் மக்களுக்கான ஆதரவம் இலங்கை மற்றும் இந்திய அரசுகளைப் பெருந் திண்டாட்டத்துக்குள்ளாக்கியுள்ளது என்பதனை யாரும் மறுக்கவோ மறக்கவோ முடியாது.

ஒரு அரைக் குவளை தேனீர் உள்ள குவளையைப் பார்த்து அது அரைவாசி நிறைந்துள்ளது என்றும் கூறலாம் அதில் அரைவாசி இல்லையே என்றும் ஆதங்கப்படலாம்... இது அவரவர் மன நிலையையும் அவ்வாறு பேசுவோருடைய குணத்தையுமே எடுத்துக் காட்டும். எமக்கு நல்லவை மட்டுமே எந்த ஒரு விடயத்திலும் தெரிந்தால்... அது எமது பிம்பத்தின் வெளிப்பாடே....

0 Comments:

Post a Comment

<< Home