தமிழில்

எனது தமிழ் ஆக்கங்களினை இப் பதிவில் நீங்கள் பார்க்கலாம்... எனது ஏனைய பதிவுகளைப் பார்ப்பதற்கு "View My Complete Profile" இனை அழுத்தி வேண்டிய பதிவினைத் தெரிவு செய்க.

Friday, January 02, 2009

எழு தமிழா....

எழு தமிழா...

தூங்காத விழிகளுடன்…
ஏங்குகின்றேன் விடியலுக்காய்
துயிலாத மனதுடனே
துடியாய்த் துடிக்கின்றேன்…

என்னண்ணன் ஈழம் வென்றிடுவான்
விடுதலையைத் தந்திடுவான்

எனினும்…
எம்மக்கள் துன்பங்கண்டு
என்னடா வாழ்க்கையிது என்று
என்மனமோ விம்மிடுதே…

எடுத்து எடுத்து நடும் மரமாய்
வேரை விட்டு வளர முடியவில்லை
செவிடன் காதில் சங்காய்
வெளி நாடுகளோ எம் குரலைக் கேட்கவில்லை
நாம் என்ன செய்வோம் இத் தரணியில்
என்று பார்த்தால்….
நமக்கு நாம் முதலில் கை கொடுத்துத்
தூக்கிவிடப் பார்க்க வேண்டும்…
மற்றவன் எதற்காய் வரவேண்டும்
உற்றான் என்று நாமிருக்கையில்
நாம் என்ன செத்தா போய்விட்டோம்…
ஒன்றிணையுங்கள் உறவுகளே…
தாய் நாடு எமது…
இன்று நீங்கள் வாய்ப் பேச்சுடன் மட்டும்
நில்லாது விடின்…
வெளி நாடுகளும் எம்பின் வரும் நிலை வரும்
இன்று கண்மூடி காது பொத்தி இருப்போர்
இனி கெஞ்சிக் கெஞ்சி எம்பின்னால் வரும் நிலையை
நாமே உருவாக்குவோம்…

எவ்வளவு காலம்தான்
மற்றவர்களின் உதவிக்காய்
உரத்து பறையடிப்பது?
நமக்கென்ன கை கால்கள் இல்லையா?
இல்லை நாம் ஊனமுற்றவரா?
எழு தமிழா… எழு…..
நாமே இன்று எமக்காய்
சுதந்திரம் படைத்திடுவோம்…

0 Comments:

Post a Comment

<< Home