தமிழில்

எனது தமிழ் ஆக்கங்களினை இப் பதிவில் நீங்கள் பார்க்கலாம்... எனது ஏனைய பதிவுகளைப் பார்ப்பதற்கு "View My Complete Profile" இனை அழுத்தி வேண்டிய பதிவினைத் தெரிவு செய்க.

Friday, January 30, 2009

நீயும் ஒரு விதையாய்….

நீயும் ஒரு விதையாய்….

முத்துக்குமாரே…
மாசற்ற மைந்தன் நீ…
மறையாது வாழ்வாய் நீ…
எம் நெஞ்சில் நிலையாய் நீ…
பதித்துவிட்டாய் என்றுமே...
எனதருமைச் சகோதரனே…
உன்னை நீ எரித்தது…
சில தமிழரின் மனச்சாட்சிக்கு
நீ வைத்த வெடி…
ஏன் தமிழனுக்கு வந்ததடா
இன்று இந்தக் கதி…
உனது இப் போராட்டமோ…
எமை மெய் சிலிர்க்கச் செய்கிறது...
ஐயோ… எவ்வளவு துடித்திருப்பாய்…
எவ்வளவு கதறியிருப்பாய்…
எமக்கும் வலிதான் அதனாலின்று...
எனினும்...
நீபட்ட வலியுடன் பார்க்கையில்...
சிறு தூசளவு கூட இல்லையது...
உன் செயல் எண்ணி இன்று அழுவதா…
இல்லை பெருமிதமடைவதா என்று தெரியவில்லை….

இரு வேறு உணர்வுகளும் கொந்தளிக்க...
எம் நெஞ்சங்களில் நெருப்பேற்றி நீ சென்று விட்டாய்
தமிழர் நாம் ஒன்றிணைந்தால்
தரணியில் தமிழர் ஏன் ஏதிலியாய் அலையவேண்டும்
இன்றே… இப்பொழுதே உறுதி கொள்வோம்…
உன் இறுதிக் கிரியை முடியு முன்னர்…
நாம் எழுந்து நிற்போம்….
இன்றாவது எமக்காகவாய்…

யாதும் ஊரே… யாவருங் கேளீர்…
அன்பே என்கள் உலக தத்துவம்…
இன்று… யாதும் எமக்கூராய்…
ஆனால் யாருக்கும் வேணடா அகதிகளாய் நாம்…
யாரிங்கு எமக்குக் கேளீர்?
நாமே எமக்கெதிரியாய்…
நாமே எம்மை காட்டிக்கொடுப்பவராய்...
ஏனிந்தக் கதி எமக்கு…
நீயன்று… உனை எரிக்கவில்லை
உன்னை விதைத்துவிட்டாய்
ஒரு விதையாய்…

2 Comments:

At 4:38 AM, Blogger Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

 
At 8:29 AM, Blogger www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

 

Post a Comment

<< Home